SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை - மதுரை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு - மதுரை மண்டல பொது மேலாளர்

2018-03-14@ 15:38:36

மதுரை: சென்னை - மதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை அகல ரயில் பாதையில் இம்மாத இறுதிக்குள் ரயில் சேவையை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட
பணிகள் முடிவடைந்த நிலையில் மணப்பாறையை அடுத்துள்ள தாமரைப்பாடி முதல் கள்பட்டிசத்திரம் வரையில் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி நடத்தப்பட்ட ஆய்வு வெற்றி அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆய்வு குறித்த சான்று வழங்கிய பின்பு இரட்டை அகல ரயில் பாதையில் சேவை தொடங்கும் என்று மதுரை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சி - திண்டுக்கல் இடையேயான 2 வது அகல ரயில் சேவை பாதை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை முதல் மதுரை வரை இரட்டை ரயில் பாதை வசதி கிடைக்கும் எனவும், இதன் மூலம் ரயில்களின் பயண நேரம் குறைவதோடு மற்றொரு ரயிலுக்காக நிறுத்தி வைக்கும் நிலையும் தவிர்க்கப்படும் என தெரிவித்தனர். மேலும் சென்னை - மதுரை இடையே கூடுதல் ரயில்களையும் இயக்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்