SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி இடைத்தேர்தல் நிலவரம்...பாஜக-வின் முடிவிற்கான ஆரம்பம் : மம்தா அதிரடி கருத்து

2018-03-14@ 15:14:03

டெல்லி; இடைத்தேர்தல் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்திருப்பதால் அதிர்சியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் ஆட்சியமைந்தது. இதனால் வெற்றிக் களிப்பில் இருந்த பாரதிய ஜனதா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எளிதாகவே வென்று விடுவோம் என கணக்கு போட்டது. ஆனால் 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா பின்தங்கியுள்ளது. இந்த பின்னடைவு பாரதிய ஜனதாவின் அசாத்திய நம்பிக்கைக்கு கிடைத்த அடி என சிவசேனா கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதுபற்றி பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், கோரக்பூர் மற்றும் புல்பூரில் பாரதிய ஜனதாவிற்கு பாதகமாக முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. பாரதிய ஜனதாவிற்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைவது சிறப்பு என்று தாம் கூறவில்லை.

ஆனால் மோடி அலை ஓய்ந்து வருவதாகவே இது காட்டுகிறது என்றார். இதனிடையே டெல்லி பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள மூத்த தலைவர்கள், தோல்விக்கான காரணம் குறித்து எடுத்து கூறியுள்ளனர். அயோத்தி விவகாரம், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்துள்ளனர். இதனிடையே மேற்கு வாங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் உத்திரப்பிரதேச இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சிறந்த வெற்றி கிடைத்துள்ளது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான் என பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RathYatraStalinarrested

  ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல்: ஸ்டாலின் உட்பட திமுகவினர் கைது

 • JunoAircraftJupiter

  வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட சிவப்பு புள்ளிகளை படம் பிடித்துள்ள ஜூனோ விண்கலம்: நாசா வெளியீடு

 • SparrowDay2018March

  இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: அழியும் தறுவாயில் உள்ள உயிரினத்தை காப்போம்..

 • TropicalStormElikam

  மடகாஸ்கர் நாட்டை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் தாக்கிய எலியாகிம் புயல்: 17 பேர் உயிரிழப்பு

 • LasFellasSpain

  ஸ்பெயினில் செயிண்ட் ஜோசப் நினைவாக கொண்டாடப்படும் "லாஸ் ஃபல்லாஸ்" திருவிழாவின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்