SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனமழை எதிரொலி : தொடர்ந்து உயரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

2018-03-14@ 12:50:08

திருநெல்வேலி: இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விடியவிடிய மழை பெய்தது. தொடர் மழை காரணமாக குற்றலாம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்பறித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி பாபநாசம் காரையார் அணையின் தற்போதைய நீர்மட்டம் 32 அடியாகவும், நீ்ர்வரத்து 2642.34 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 356  கனஅடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 83.52 அடி,  நீர் வரத்து 110 கனஅடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 110 கனஅடியாக உள்ளது. கடனாநதி அணையின் தற்போதைய நீர்மட்டம் 55 அடி, நீர் வரத்து 627 கனஅடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 25 கனஅடி, இராம நதி அணையின் இன்றைய நீர்மட்டம் 35 அடியாகவும், நீர் வரத்து 62.50 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 5 கனஅடியாகவும் உள்ளது. மழை காரணமாக அணைகளில் நீர்மட்டடம் உயர்ந்து வருவதால் விவசாளயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்