SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர் நிலைகள் வறண்டதால் வயல்களில் இரைதேடி குவியும் பறவைகள்

2018-03-14@ 12:44:33

ஓமலூர்: ஓமலூர் வட்டார கிராமங்களில், நீர் நிலைகள் வறண்டதால் வயல்களில் இரைதேடி மயில் உள்ளிட்ட பறவைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. ஓமலூர் வட்டார கிராமங்களில் கடந்தாண்டு ஓரளவிற்கு மழை பெய்ததால், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், விவசாய பணிகளும் சிறப்பாக நடந்தது. இந்நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீர்நிலைகளிலும் தண்ணீர் குறைந்து வருவதால், இரை கிடைக்காத பறவைகள், வயல்களில் இரை தேட தொடங்கியுள்ளது. ஏற்காடு மலையில் இருந்து வரும் தண்ணீர், சரபங்கா ஆற்றில் வந்து டேனிஸ்பேட்டை ஏரி, கோட்டேரி, பண்ணப்பட்டி ஏரி ஆகியவற்றை நிரப்பி விட்டு வழியும் உபரி நீர், மீண்டும் சரபங்கா ஆற்றிலேயே கலந்து தேவூர் காவிரியாற்றில் கலக்கிறது.

வழியெங்கும் உள்ள ஏரி, குளங்களை நிரப்பி செல்லும் இந்த ஆறும், தற்போது வறண்ட நிலையில் உள்ளது. இதனால் ஓமலூர், காடையாம்பட்டி வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஏரிகளிலும் தண்ணீர் இல்லாததால் மயில்கள், நாரை, கொக்கு, நீர்காகங்கள் போன்ற பறவைகளுக்கு போதுமான இரை கிடைப்பதில்லை. கொக்கு, நாரைகள் ஏரிகளின் கரைகள் ஓரமாக உள்ள வயல் வெளிகள், கிணற்றுநீர் பாசனத்தில் விவசாயம் செய்துள்ள வயல்களில் இறங்கி இரை தேடி வருகின்றன. இதனால் பயிர்களும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதே நிலை நீடித்தால் பறவைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்