SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூருவில் போலி நிதி நிறுவனம் நடத்தி 800 கோடி ரூபாய் மோசடி : பணத்தை இழந்த டிராவிட், சாய்னா நேவால்

2018-03-14@ 12:04:49

பெங்களூரு: கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட், பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் உள்ளிட்ட 800 பேரிடம் பெங்களூருவைச் சேர்ந்த போலி நிதி நிறுவனம் 300 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் 800-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்திய விளையாட்டு வீரர்கள் ராகுல் டிராவிட், சாய்னா நேவால், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் உட்பட சினிமா கலை, அரசியல் துறையை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட் 35 கோடி ரூபாய் முதலீடு செய்து 20 கோடி ரூபாய் மட்டும் பெற்றதாகவும், சாய்னா நேவால் 2 கோடி ரூபாய் முதலீடு செய்து 75 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று அந்நிறுவனம் சுமார் 800 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளது தெரிவந்துள்ளது. இது தொடர்பாக போலி நிறுவனத்தின் உரிமையாளர் ராகவேந்திரா ஸ்ரீநாத் என்பவரையும், அவரது ஏஜெண்டுகளான சுரேஷ், நரசிம்ம மூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்