SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அரசின் நிதி கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் போராட தயார்: அமைச்சர் ஜெயக்குமார்

2018-03-14@ 12:04:49

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தரப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 10-ம் தேதிக்கு முன் கடலுக்கு சென்றவர்களுக்கு ஹாம் ரேடியோ மூலம் தகவல் தரப்பட்டதாக அவர் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கையை அடுத்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் பத்திரமாக கரை சேர்ந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கடலில் ஏற்பட்டுள்ள சூறைக்காற்றில் எந்த மீனவரும் சிக்கவில்லை என்றும் மராட்டிய கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு புயல் சின்னம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது நடுக்கடலில் எந்த மீனவரும் தத்தளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் நிதி கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் போராடவும் தயார் என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணித்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். மீனவர்கள் மாயமாகி 7 ஆண்டுகளுக்குள் திரும்பி வராவிட்டால் தான் அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படுவது வழக்கம். இருப்பினும் ஓகி புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்