SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜெயேந்திரர் ஆராதனை விழா

2018-03-14@ 01:52:30

சென்னை: காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உயிரிழந்தார். அவரது  உடல் சந்திரசேகரேந்திரர் அடக்கம் செய்யப்பட்ட பிருந்தாவனத்தின் இடதுபுறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து மார்ச் 3ம் தேதி முதல் தினந்தோறும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சங்கீத வித்வான்கள் மூலம் இசையஞ்சலி நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.ஆராதனை விழாவான நேற்று காலை முதல் வேத விற்பன்னர்கள் 32 பேர் பங்கேற்ற தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இந்த பூஜையில் 32 வேத  விற்பன்னர்கள் ரூபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காட்சியளிப்பதாகக் கருதி அவரது குடும்பத்தினர் ஆசீர்வாதம் பெற்றனர். மேலும் காலை  முதல் உடையாளூர் கல்யாணராமன், விட்டல் ஜெயகிருஷ்ண பாகவதர் குழுவினரின் பஜனைகளும், கச்சேரிகளும் நடந்தன.

 நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த  தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, பாஜ தேசிய செயலாளர்  எச்.ராஜா உள்ளிட்டோர் ஜெயேந்திரர் அடக்கம் செய்யப்பட்ட பிருந்தாவனத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பின்னர்  மாலை 3 மணியளவில் சங்கரா குழும பள்ளி மாணவர்களின் ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.  மாலை 4 மணிக்கு ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தும் சிரத்தாஞ்சலி நடைபெற்றது.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, ஜோதிடர் ஏஎம்ஆர், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட   பல்வேறு மாநிலங்களில் இருந்து மடாதிபதிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன்  தலைமையில் மாணவர்கள் அன்னதானம் வழங்கினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்