SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லோடு வேன் டிரைவர் கொலையில் திடுக்கிடும் தகவல் கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியே தீர்த்துக்கட்டினார்

2018-03-14@ 01:52:28

* போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் * கள்ளக்காதலன் உள்பட 6 பேர் கைது

சென்னை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை ஆட்களை வைத்து தீர்த்துக்கட்டியதாக போலீசாரிடம் மனைவி பரபரப்பு வாக்குமூலம்  அளித்துள்ளார்.
கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (37), மினி லோடு வேன் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள்  உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற செல்வம், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தின் அருகே கழுத்து  அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் ஒன்று கிடப்பதாக சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்த போது அது மினி லோடு வேன் டிரைவர்  செல்வம் என்று தெரியவந்தது. இதன்பிறகு செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எஸ்.பி.சந்தோஷ் அதிமானி உத்தரவின்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி.சுப்புராஜூ மேற்பார்வையில்  திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் எஸ்.ஐ.க்கள் முத்துகுமார், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்நிலையில், செல்வத்தின் மனைவி சந்திரமதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அதை பலமுறை  செல்வம் கண்டித்ததும், இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்ததும், கடந்த வாரத்தில் இது தொடர்பாக பெரிய சண்டை  ஏற்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது இதை தொடர்ந்து, சந்திரமதி (27) நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை  கூட்ரோடு அருகே பஸ்சுக்காக நின்று கொண்டிருக்கும்போது தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்குப் பின்  முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல்நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். தன் கணவரை  கள்ளக்காதலனை வைத்து தீர்த்துக்கட்டியதை ஒப்புக் கொண்டார்.

சந்திரமதி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நானும் அதே ஆயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (28) என்பவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பழகி வந்தோம். எங்களுடைய  தொடர்பு எனது  கணவர் செல்வத்துக்கு தெரிந்து அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார். எங்களது கள்ளக்காதலுக்கு கணவர் செல்வம் தடையாக இருப்பதால் அவரை  தீர்த்துக்கட்ட நானும் கள்ளக்காதலன் ஆனந்தனும் முடிவு செய்தோம். அதன்படி ஆனந்தன் தனது நண்பர்களான ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), வாயலூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (30), கார்த்திக் (22), சுரேஷ் (35)  ஆகியோர் மூலம் செல்வத்தை தீர்த்துக் கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சவாரிக்கு வெங்கப்பாக்கத்திற்கு லோடு வேனை எடுத்துக்  கொண்டு வரச்சொல்லி ஆனந்தன்,  செல்வத்திற்கு போன் செய்துள்ளான்.

அதனைத் தொடர்ந்து செல்வம் லோடு வேனை எடுத்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பூந்தண்டலம் பகுதியில்  இருட்டில் ஏற்கனவே காரிலும், பைக்கிலும் காத்திருந்த ஆனந்தன் மற்றும் அவனது நண்பர்கள் செல்வத்தின் லோடு வேனை நிறுத்தி அவரை இறக்கி  அங்குள்ள பாலத்தின் அருகே இழுத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர். இவ்வாறு சந்திரமதி வாக்குமூலத்தில் கூறினார்.

இதை தொடர்ந்து சந்திரமதி கைது செய்யப்பட்டார். பின்னர் கள்ளக்காதலன் ஆனந்தன் அவரது கூட்டாளிகள் தர், கார்த்திக், சுரேஷ், பிரகாஷ்  ஆகியோரையும் போலீசார் கைது  செய்தனர்.  கள்ளக்காதலுக்காக கணவனையே தீர்த்துக் கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்