SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூர்மார்க்கெட்-அரக்கோணம் மார்க்கத்தில் இன்று முதல் மின்சார ரயில்களில் 12 பெட்டிகளை இணைக்க முடிவு

2018-03-14@ 01:45:48

சென்னை: பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று மின்சார ரயில்களில் 12 பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்ட நாள் முதல் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரில்  இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் வழக்கத்தை விட அதிகமாக கூட்ட நெரிசல் உள்ளது.ஆகையால் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்கவும், இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கவும்  ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்திருப்பதாக தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து, பயணிகளின் கோரிக்கை ஏற்று மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில்  இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர்  குல்ஸ்ரேஸ்தா அறிவித்திருந்தார்.இந்த நிலையில் முதற்கட்டமாக, இன்று(புதன்கிழமை) முதல் மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையேயான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார  ரயில்களில் 12 பெட்டிகளை இணைத்து இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
12 பெட்டிகளாக மாற்றப்படும் ரயில்கள் மற்றும் நேரம்: மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 4.30 மணி.
திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 5.55 மணி.
மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 8.05 மணி
திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 9.25 மணி.
 மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 11.30 மணி
 திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 1.05 மணி.
 மூர்மார்க்கெட்-திருவள்ளூர் மதியம் 2.35 மணி.
 திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மாலை 4 மணி
 மூர்மார்க்கெட்-அரக்கோணம் மாலை 6.40 மணி.
 அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 9.25 மணிக்கு இயக்கப்படும் ரயிலிலும் கூடுதலாக 3 பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்