SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு வக்கீல்கள் நியமன விவகாரம் சென்னை கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வக்கீல் தாக்கல்

2018-03-14@ 01:40:49

சென்னை: மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத சென்னை கலெக்டர்  மீது முன்னாள் அரசு வக்கீல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை முன்னாள் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர அரசு வக்கீலாக கடந்த 2011 முதல் பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல் 2017 ஜூன் 2ம்  தேதி என்னை பதவியிலிருந்து நீக்கம் செய்து மகளிர் நீதிமன்ற அரசு வக்கீலாக பதவி வகிக்கும் கவுரி அசோகன் என்பவருக்கு கூடுதல் பொறுப்பாக  மாநகர அரசு வக்கீல் பதவியை வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் சென்னை  மாவட்டக் கலெக்டர் புதிய வக்கீல்களின் பட்டியலை தயாரித்து 4 வாரங்களுக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலை அரசு பரிசீலித்து உரிய  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், இந்த உத்தரவை சென்னை கலெக்டர் இதுவரை அமல்படுத்தவில்லை.

தொடர்ந்து கவுரி அசோகன் மாநகர அரசு வக்கீலாக பணியாற்ற அரசுத் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் உத்தரவை  அமல்படுத்தாத உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை கலெக்டர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விரைவில் விசாரணைக்கு  வரவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்