SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் கண்ணாடி உடைந்து பள்ளி மாணவி படுகாயம்

2018-03-14@ 01:40:45

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். மணலி மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக  பணியாற்றி வருகிறார். இவரது மகள் சந்திரகலா (14). இவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து  வருகிறார். பள்ளி முடிந்து, சிறப்பு வகுப்புகள் முடித்து நேற்று இரவு 7.30 மணிக்கு புதுவண்ணாரப்பேட்டையில் பஸ்சுக்காக காத்திருந்தார். தங்கசாலையில் இருந்து  செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் (தடம் எண்: 56 டபிள்யூ) ) ஏறி உட்கார்ந்து வந்தார்.
 
திருவொற்றியூர் தேரடியை தாண்டி பேருந்து சென்றபோது, திடீர் என ஜன்னல் ஓர கண்ணாடி உடைந்து சந்திரகலா தலை மீது விழுந்தது. இதில்  அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பஸ்சை நிறுத்தி  விட்டு கண்டக்டர், டிரைவர் சந்திரகலாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்