SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும்

2018-03-14@ 01:27:21

சென்னை: ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ள மாணவர்களை வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சித்துறை ஆணையர் பாராட்டியுள்ளார்.
தலைக்கவசம் அணியாமலும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதாலும் ஏற்படும் விபத்துக்களை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி  செய்திடும் வகையில் `பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் தூங்கா கண்ணாடி’’ ஆகிய கருவிகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்  என்.சி.வி.டி.யின் கீழ் அரியலூர் மாவட்டம் செந்துறையில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள்  வி.கணேசன், பி.சுபாஷ், ஜி.செல்வமுருகன், கே.கார்த்திக்ராஜா, ஆர்.தமிழ், டி.விஜயகாந்த், எம்.அரவிந்தன், என்.தெய்வசிகாமணி, எம்.சுந்தரபாண்டி,  பி.கமலக்கண்ணன், எஸ்.ரஞ்சித், எஸ்.செல்வமணி ஆகியோர் பயிற்றுநர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களையும் இதற்கு உறுதுணை புரிந்த பயிற்றுநர்களையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி பாராட்டினார்.இந்த கருவியில் இரு சக்கர வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள தலைக்கவசத்தை அணிந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க இயலும். தலைக்கவசம்  பயன்படுத்தினாலும் மது அருந்தியிருப்பின் வாகனத்தை இயக்க இயலாது என்ற வசதியும் இதில் உள்ளது. எனவே இந்த கருவியின் மூலம் தலைக்கவசம் அணியாமலும், மது அருந்தியும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க  இயலும். மேலும் வாகனத்தை இயக்கும்போது ஓட்டுநர் தூங்க ஆரம்பித்தால் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கண்களை மூடினால் வாகனம்  தானாகவே எச்சரிக்கை ஒலி எழுப்பும்.  இந்த தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் நடைபெறும்  44வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சியிலும் இடம்பெற்றள்ளன.

இனிமே மாப்பிள்ளை பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-03-2018

  24-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • volcanotoxicsmoke

  இந்தோனேசியாவில் மவுண்ட் லிஜன் எரிமலை சீற்றம் : நச்சுப் புகையால் பொதுமக்கள் பாதிப்பு

 • Mexicoearthquake6months

  மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாத வீடுகள்: கூடாரங்களில் வசிக்கும் அவலம்

 • sagargawachachennai

  கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த சென்னை மெரினா கடற்கரையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

 • NSivaprasadMP

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தினமும் விதவிதமான அலங்காரத்தில் போராடிய எம்.பி.யின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்