SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடி ராணுவ உடை தொழிற்சாலை மூடுவதை எதிர்த்து 1500 தொழிலாளர்கள் உண்ணாவிரதம்: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

2018-03-14@ 01:27:20

சென்னை: ஆவடியில் உள்ள ராணுவ உடை தொழிற்சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1500 தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திருமாவளவன், வீரமணி, பாலகிருஷ்ணன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று கண்டனம்  தெரிவித்தனர். ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலை (ஓ.சி.எப்) கடந்த 1961ம் ஆண்டில் காமராஜர் ஆட்சி காலத்தில், அப்போது மத்திய ராணுவ  துறை அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன் முயற்சியால் துவங்கப்பட்டது. இங்கு 811 பெண்கள் உள்பட 2,121 தொழிலாளர்கள் பணியாற்றி  வருகின்றனர். மேலும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும், 150க்கும் மேற்பட்ட பயிற்சி பழகுனர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி, வீரர்களுக்கு அனைத்து வகையான சீருடைகள், கோட், மேற்கூரை (டென்ட்), பாராசூட்,  ஷு உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழிற்சாலையில் இனிமேல் சீருடை தயாரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆண்டு  ஒன்றுக்கு ₹10 ஆயிரம் சீருடைப்படி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தனியார் மூலம் சீருடைகளை தைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை அடுத்து,  ஆவடி உடை தொழிற்சாலையை வரும் ஏப்ரல் மாதத்தில் மூடப்போவதாக மத்திய அரசு முடிவு  எடுத்துள்ளது. இதனால் அங்கு  பணியாற்றும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை கண்டித்து படைத்துறை உடை தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்களை திரட்டி  தொடர்ந்து ஒன்றரை மாதமாக பல்வேறு வகையான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று ஏ.ஐ.டி.இ.எப், தொ.மு.ச, ஐ.என்.டி.யூ.சி, ஏ.இ.யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆவடி நகராட்சி அலுவலகம்  அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு, ஏ.ஐ.டி.இ.எப் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். பல்வேறு  சங்கங்களை சேர்ந்த பொதுச்செயலாளர்கள் வரவேற்புரை ஆற்றினர். உண்ணாவிரதத்தை உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் தலைவர் ஆர்.குசேலர்  துவக்கி வைத்தார். உண்ணாவிரத்தை திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் முடித்து வைத்தார். இதில்,  பெண்கள் உள்பட  1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்க நாராயணன்,  மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழக  வாழ்வுரிமை கடசி தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி,  பாமக மாநில துணை பொதுச்செயலாளர்  கே.என்.சேகர், நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், திமுக முன்னாள் எம்.பி ஆ.கிருஷ்ணசாமி,  த.மா.கா மாவட்ட தலைவர்  விக்டரி மோகன், சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட  செயலாளர் ஏ.டி.சந்திரபோஸ் உள்பட வியாபாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு  ஆதரவு  அளித்தனர்.

போராட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்போராட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்