SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூப்பர்வைசரை பீர் பாட்டிலால் அடித்த விவகாரம் 273 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்: பார் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தல்

2018-03-14@ 01:27:19

சென்னை: டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரை, பார் உரிமையாளர் பீர் பாட்டிலால் தாக்கியதை கண்டித்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 273  டாஸ்மாக் கடைகளை மூடி, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். பார் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று  கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் ராமன் (45). இவர், சோழவரம் காந்தி நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சூப்பர்வைசராக  பணிபுரிந்து வருகிறார். இந்த டாஸ்மாக் கடை அருகே அரசு உரிமம் பெற்ற மதுபான பார் உள்ளது.

இந்த பாரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த  400 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.பாரில் பீர் பாட்டில்களை வைத்திருப்பது குறித்து, சூப்பர்வைசர் ராமன்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருப்பார் என பார் உரிமையாளர்  நினைத்துள்ளார். இதன் காரணமாக ரவுடிகளை வைத்து சூப்பர்வைசர் ராமனை தாக்கியுள்ளனர்.பீர் பாட்டில் மூலம் தாக்கியதில் ராமனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு பொது  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 1638 பேரும், நேற்று பணியை புறக்கணித்து மாவட்டத்தில் உள்ள 273 டாஸ்மாக்  கடைகளையும் திறக்கவில்லை. தொடர்ந்து, சிஐடியு மாநில செயலாளர் திருச்செல்வம் தலைமையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள்  300க்கும் மேற்பட்டோர், காக்களூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட மேலாளர் ராஜராஜனிடம், ‘’டாஸ்மாக் ஊழியரை தாக்கிய பார் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். பாறை நிரந்தரமாக மூடி,  லைசென்சை ரத்து செய்ய வேண்டும். காந்தி நகர் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அதுவரை கடைகளை மூடி போராட்டத்தில்  ஈடுபடுவோம்’’’’ என கோரிக்கை மனு கொடுத்தனர்.
தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்களிடம் நிர்வாக பொது மேலாளர் முனுசாமி, மாவட்ட மேலாளர் ராஜராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  முடிவில், பார் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், காந்தி நகர் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றும்வரை  மூடுவதாகவும், பார் லைசென்சை ரத்து செய்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து ஊழியர்கள் கலைந்து சென்று, பிற்பகல் 3 மணிக்கு  மேல் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்றனர்.

வெயிலில் காத்திருந்த குடிமகன்கள்
சோழவரம் காந்தி நகர் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரை, பார் உரிமையாளர் ரவுடிகளை வைத்து தாக்கியதால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை.பகல் 12 மணிக்கு வழக்கம்போல கடைகளை திறப்பார்கள் என குடிமகன்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், காலை 11 மணிக்கே டாஸ்மாக்  கடைகள் முன் காத்திருந்தனர். பகல் ஒரு மணியாகியும் திறக்காததால், ஊழியர்கள் மீது ஆத்திரமடைந்தனர்.

இதனால், டாஸ்மாக் கடைகள் முன் குடிமகன்கள் சாலையில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், பிற்பகல் 3 மணிக்கு டாஸ்மாக்  கடை திறந்ததும், குடிமகன்கள் வரிசையாக நின்று மதுபானங்களை வாங்கிச் சென்று தாகத்தை தீர்த்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்