SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாரில் வேலை செய்தவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

2018-03-14@ 01:27:17

சென்னை: பாரில் வேலை செய்தவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மனித உரிமை ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்காவை சேர்ந்தவர் முனுசாமி. இவர் அதே பகுதியில் பாரில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த  23.7.2009 அன்று அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திக்கு புதியதாக வேலைக்கு வந்த உதவி ஆய்வாளர் திலகவதி என்பவர் இரவு 9  மணியளவில் பாருக்கு வந்துள்ளார்.

அப்போது யாருடா ஓனர் என்று சத்தமாக கத்தியுள்ளார். முனுசாமி ஓனர் வெளியே சென்றுள்ளார் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.  ஆனால் திலகவதி நான் ஸ்டேசனுக்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இருந்தும் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை என்று கூறி முனுசாமியின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் காவலர்களும் சேர்ந்து கொண்டு,  எட்டி உதைத்து பலமாக தாக்கியுள்ளனர். இதில் முனுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காவல்நிலையத்துக்கு கூட்டி சென்றும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் இரவு 11 மணிக்கு ஒனர் வந்ததும் இவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து முனுசாமி திலகவதி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உதவி ஆய்வாளருக்கு 50 ஆயிரம்  அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்