SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டவாள பராமரிப்பில் குறைபாடு சிஏஜி அறிக்கையில் பரபரப்பு தகவல்

2018-03-14@ 01:24:53

புதுடெல்லி: தண்டவாள பராமரிப்பு பணிகளில் பல குறைபாடுகள் உள்ளதால், அவற்றை சரிசெய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறை பற்றிய சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014-15, 2016-17ம் ஆண்களில் நடந்த 16 ரயில் விபத்துக்கள் தடம்புரண்டதால் ஏற்பட்டுள்ளன. இதற்கு தென்மேற்கு, வடக்கு மத்திய, கிழக்கு மத்திய, தென் கிழக்கு மற்றும் தென்னக ரயில்வே மண்டலங்களில் மோசமான தண்டவாள பராமரிப்பு காரணமாக நடந்துள்ளன. தண்டவாள பாதிப்பு காரணமாக பல இடங்களில் 294 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வேயில் 37 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளின் தணிக்கை அறிக்கையில், தண்டவாள பராமரிப்பு வலுப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விதிமுறைப்படி தண்டவாள ஆய்வுகளை ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. வடக்கு மத்திய, மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் தண்டவாள பராமரிப்பு திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன. விதிமுறைப்படி முன்னெச்சரிக்கையாக செய்யப்படவில்லை. தண்டவாள ரோந்து பணிக்கு செல்லும் ஊழியர், ஏதாவது குறைபாடை கண்டுபிடித்தால், அதுபற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க அவரிடம் தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லை. தண்டவாள ஆய்வுக்கு செல்லும்போது விதிமுறைப்படி எடுத்துச் செல்ல வேண்டிய  ‘அல்ட்ராசோனிக் குறை கண்டுபிடிப்பு இயந்திரங்கள்’ எடுத்துச் செல்லப்படுவதில்லை. தண்டவாளத்தின் சரளைத் தளம் பல இடங்களில் ஓராண்டு முதல் 22 ஆண்டுகள் வரை மாற்றப்படாமல் உள்ளன.

2015-16, 2016-17ம் ஆண்டுகளில் தண்டவாள உடைப்பு சம்பவங்கள் 274 நடந்துள்ளன. இணைப்பு விடுபடும் சம்பவங்கள் 465 இடங்களில் நடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், 7 ரயில் விபத்துக்கள், தண்டவாளம் உடைந்ததால் ஏற்பட்டுள்ளன. பல ரயில்வே மண்டலங்களில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 9 முதல் 22 சதவீதம் வரை பற்றாக்குறையாக உள்ளனர். தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை, வேறு பணிக்கு அமர்த்துவதும் நடக்கிறது. தண்டவாள பராமரிப்பாளர்கள் பலர் பெரு நகரில் அதிகளவில் பணியமர்த்தப்படுகின்றனர். அனைத்து இடங்களிலும் தண்டவாள பராமரிப்பு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பராமரிப்பு பணிக்கு இன்ஜினியரிங் பிரிவுக்கு தேவையான பிளாக்குளில் 50 சதவீத பற்றாக்குறை நிலவுகிறது.

மோசமான பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் வேக கட்டுபாடு விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வேக கட்டுப்பாடு, செயல்பாட்டை பாதிப்பதோடு, நிதி வருவாயையும் பாதிக்கிறது. அதனால் வேக கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவதற்கு பராமரிப்பு பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த தண்டவாள பராமரிப்பு திட்டத்தை அனைத்து ரயில்வே மண்டலங்களும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்