SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவால் இண்டிகோ, கோ ஏர் நிறுவனத்தின் 65 விமானங்கள் திடீர் ரத்து

2018-03-14@ 01:24:01

மும்பை: விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இண்டிகோ, கோ ஏர் நிறுவனத்தின் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மும்பையில் இருந்து உத்தரப் பிரதேச மாநில தலைநகரான லக்னோ நோக்கி நேற்று முன்தினம் காலை 186 பயணிகளுடன் ஏர் இண்டிகோவின் ஏ320 ரக ஏர்பஸ் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் இரண்டாவது இன்ஜின் திடீரென்று முற்றிலுமாக செயலிழந்தது. இதையடுத்து விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து இவ்வகை இன்ஜின்கள் பொருத்தப்பட்ட இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் கோஏர் நிறுவனத்துக்கு சொந்தமான  விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

நடுவானில் பறக்கும்போது அடிக்கடி இன்ஜின்கள் செயலிழப்பதால் ‘ஏ 320 நியோ’ ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இண்டிகோ நிறுவனம் நேற்று  47 உள்நாட்டு விமானங்களின் சேவையை ரத்து செய்தது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ் மற்றும் கவுகாத்தி போன்ற நகரங்களிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. இதே போல் கோ ஏர் நிறுவனம் 18 விமான சேவையை ரத்து செய்தது. முக்கியமான 8 நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் முன்பதிவு செய்தவர்கள் மாற்று விமானங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு முழுக்கட்டணமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பயணிகள் நலன்தான் முக்கியம்’: அடுத்தடுத்து 2 நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: ஏ 320 நியோ ரக விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது பயணிகள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. அதற்கு விமான நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மாற்று ஏற்பாடு செய்தபின் விரைவில் விமான போக்குவரத்து சரியாகும் என்று நம்புகிறேன். பாதுகாப்பு விஷயத்தில் மறுபரிசீலனை கிடையாது. பாதுகாப்பு தான் முக்கியம் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்