SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்றழுத்தம் வலுப்பெற்று மாலத்தீவுக்கு நகர்ந்தது தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் கனமழை

2018-03-14@ 01:01:17

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. நேற்று மாலத்தீவுக்கு கிழக்கே 290 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. தொடர்ந்து நேற்றிரவு வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவை நோக்கி நகர தொடங்கியது. இன்று காலை அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக(புயல்) வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்யும். கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே குமரி, லட்சத்தீவு, ராமநாதபுரம் ஆகிய பகுதி மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று மீண்டும் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், புயல் சின்னம் உருவாவதற்கு முன்பே கடலுக்குள் சென்ற மீனவர்கள் பலர் இன்றும் கரைக்கு திரும்பவில்லை என்று அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்