SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மதுக்கடை மேற்பார்வையாளரை தாக்கியதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

2018-03-14@ 00:59:33

சென்னை: டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்தவர் ராமன்(45) இவர் செங்குன்றம் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடையில் கூடுதல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மதுபானக் கடையில் உள்ள பாரின் உரிமையாளர், மதுபானக் கடை ஊழியர்களிடம் ‘பாரில் தான் பீரை விற்பனை செய்ய வேண்டும். கடையில் விற்பனை செய்யக் கூடாது. ஆகவே பீர்பாட்டில் அனைத்தும் என்னிடம் கொடுங்கள். அதை பாரில் வைத்து நான் விற்பனை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்’. அதற்கு மதுக்கடையின் மேற்பார்வையாளர் ராமன் முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பாரின் உரிமையாளர் வேறு ஆட்கள் மூலம் பீர் பாட்டில்களை வாங்கி பாரில் வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தகவலை தெரிந்து கொண்ட கலால் துறை அதிகாரிகள் பாரில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது பாரில் இருந்து 396 பீர்பாட்டிகளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாரின் உரிமையாளர் இதற்கு காரணம் கடையின் மேற்பார்வையாளர் ராமன் தான் என கருதி அவரை தாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமன் கடையில் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது 2 பேர் ராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டில்களை வைத்து ராமனின் தலையில் அடித்துவிட்டு தப்பி ஓடினர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைகாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். போலீசார் நேற்று காலை ராமனை தாக்கி சோழவரம் பகுதியை சேர்ந்த சரவணன்(24) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ‘ராமன் பீர் பாட்டில் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.15 கேட்டார். நான் கொடுக்க முடியாது என கூறினேன். உடனே என்னை ராமன் திட்டினார். இதனால் கோபத்தில் நான் ராமனை பீர் பாட்டிலால் அடித்தேன்’ என போலீசாரிடம் அந்த வாலிபர் தெரிவித்தார்.
இதற்கிடையே, செங்குன்றம் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் பலர் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது: செங்குன்றம் டாஸ்மாக்கில் இயங்கி வரும் பாரின் உரிமத்தை ரத்து செய்யவும், அந்த கடையை அந்த பகுதியில் இருந்து அகற்றி, வேறு பகுதிக்கு மாற்றவும் கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், பாரின் உரிமையாளரை கைது செய்யக்கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2018

  21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்