SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தியோப்பியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 38 பேர் பலி

2018-03-14@ 00:42:09

அடிஸ் அபாபா : வடக்கு எத்தியோப்பியாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 38 பயணிகள் உயிரிழந்தனர்.
ஆப்ரிக்காவின் இரண்டாவது புகழ்பெற்ற நாடு எத்தியோப்பியா. பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடான எத்தியோப்பியாவில் அதிகமான மக்கள் சாலை பயணங்களுக்கு பேருந்துகளையே சார்ந்துள்ளனர். இங்கு சமீப ஆண்டுகளில் சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாவட்டத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன.
ேநற்று முன்தினம் நிகழ்ந்துள்ள இந்த விபத்து குறித்து அம்ஹாரா மண்டல செய்தி தொடர்பாளர் நிகுசு திலாஹன் கூறுகையில், “ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புபணிகள் துரிதகதியில் நடத்தப்பட்டன” என்று தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்