SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் திடீர் ஆப்கன் பயணம்

2018-03-14@ 00:41:35

காபூல்: ஆப்கானிஸ்தானில் திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ், அமைதி பேச்சுவார்த்தை நடத்த தலிபான் தீவிரவாத இயக்கங்கள் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் அமைதியை ஏற்படுத்த அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி முயற்சி மேற்கொண்டுள்ளார். தலிபான் தீவிரவாதிகளுடன் நிபந்தனைகளற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கன் அரசு தயாராக உள்ளதாக கடந்த மாதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

ஆப்கனின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, ஆப்கனின் இந்த பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள தலிபான் தீவிரவாத இயக்கங்களும் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் திடீர் பயணமாக நேற்று ஆப்கானிஸ்தானிற்கு சென்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக இவரது பயணம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. ஆப்கனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ தலிபான் தீவிரவாதிகளை பேச்சுவார்த்தைக்கு ஒப்புகொள்ள வைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்