SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை : நாடாளுமன்ற புலனாய்வுகுழு அறிவிப்பு

2018-03-14@ 00:38:27

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்ற புலனாய்வுகுழு தெரிவித்துள்ளது. கடந்த 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டண் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி குறித்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக பரப்பப்பட்டதாக ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது. இதில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாகவும் புகார் தெரிவித்தது. தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இதுகுறித்து புலனாய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் கூட்டணி, ஒத்துழைப்பு மற்றும் சதி இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளதைபோல அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் பங்கு இருந்ததை ஒப்பு கொள்கிறோம்.

இதுகுறித்து கடந்த ஒரு ஆண்டாக விசாரணை மேற்கொண்டோம். எங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் உரிய பாதுகாப்பை வழங்க உதவிபுரியும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இமெயில்கள் இணையத்தில் வெளியாகின. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், ஹிலாரியின் இமெயில்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை ஒப்புக்கொண்டனர். ஆனால் இதுகுறித்து, நாடாளுமன்ற புலனாய்வுக்குழு அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த விசாரணை முடிவிற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தலின்போது டிரம்ப் தரப்பினர் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கிடையில் பலதரப்பட்ட ரகசிய கூட்டங்கள் நடைபெற்றதை நாங்கள் கண்டறிந்தோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்