SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உதவி வேளாண் அலுவலர் நியமன பணி ஆணையை வழங்காவிட்டால் போராட்டம் : தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

2018-03-14@ 00:34:31

சென்னை : வேளாண் அலுவலர் பணி நியமனத்தில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்து 5 மாதங்களாகியும் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 206 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு மே 3ம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் 10ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அடுத்த 10 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

போட்டித்தேர்வுகளில் பங்கேற்ற 3000 பேரில் இருந்து, ஒரு பணிக்கு இருவர் வீதம் 416 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 9 முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட்டன. வழக்கமாக நேர்காணல் முடிவுகளை இரு நாட்களில் வெளியிட்டு, நியமன ஆணைகளை வழங்கி இருக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் தேவையின்றி தாமதம் செய்யப்படுவது ஏன் எனத் தெரியவில்லை. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்று வேலை கிடைத்து விடும் என்று காத்திருந்த ஜனவரி மாதம் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், பணி நியமன ஆணை வழங்கும் நடைமுறைகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அதன் பின்னர் ஒன்றரை மாதங்களாகியும் இவ்விஷயத்தில்  எந்த முன்னேற்றமும் இல்லை. பல்கலைக்கழகத்தின் சார்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. உடனடியாக பணி நியமன ஆணைகளை  வழங்காவிட்டால் கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்