SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் விளையாட்டு ஹாக்கி இந்திய அணிக்கு மன்பிரீத் கேப்டன்

2018-03-14@ 00:26:55

புதுடெல்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் தலைமையிலான அணியில் மொத்தம் 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வேல்ஸ், இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் 7ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.

கோல் கீப்பர்கள்: பி.ஆர். ஸ்ரீஜேஷ், சூரஜ் கர்கேரா. தற்காப்பு: ரூபிந்தர் பால் சிங், ஹர்மான்பிரீத் சிங், வருண் குமார், கோதஜித் சிங், குரிந்தர் சிங், அமித் ரோகிதாஸ். நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங், சுமித், விவேக் சாகர் பிரசாத். முன்களம்: ஆகாஷ்தீப் சிங், எஸ்.வி.சுனில், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்