SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவத்தில் இப்படியும் அதிசயம் கஞ்சா எண்ணெய்யால் புற்றுநோய் சரியானது : இங்கிலாந்து பெண்ணுக்கு மறுவாழ்வு

2018-03-14@ 00:23:36

லண்டன் :  கஞ்சா எண்ணெய் பயன்படுத்தியதால் முற்றிய நிலையில் இருந்த புற்றுநோய் சரியானதாக இங்கிலாந்தை ேசர்ந்த பெண் ஒருவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜாய் ஸ்மித் (52). இவர் வயிறு மற்றும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 6 வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று கடந்த 2016ம் ஆண்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இருந்த புற்றுநோய் குணமடையும் நிலைக்கு வந்துள்ளது. ஜாய் ஸ்மித்தின் புற்றுநோய் குணமாவதற்கான காரணத்தை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தொடர்ச்சியாக கஞ்சா எண்ணெய்யை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். ேகன்னாபிஸ் எனப்படும் கஞ்சா எண்ணெய் இங்கிலாந்தில் சட்டவிரோத பொருளாகும்.

இது தொடர்பாக ஜாய் ஸ்மித் கூறுகையில், “எனது நண்பர் ேகன்னாபிஸ் எண்ணெய் புற்றுநோயை குணப்படுத்துகின்றது என்பதை ஆன்லைன் தேடுதல் மூலமாக கண்டறிந்துள்ளார். நான் அதனை பயன்படுத்த தொடங்கினேன்.  நான் இதற்கு முன் இதுபோன்ற எதனையும் அருந்தியது கிடையாது. ஆனால் அது இல்லை என்றால் இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சா எண்ணெய் சட்டப்பூர்வமாக்கப்படவேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். கீமோதெரபியால் அவர்களை குணப்படுத்த முடியாது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘அரிசியின் பாதி அளவில் தான் முதலில் அதனை பயன்படுத்த தொடங்கினேன். சில நேரங்களில் கிறக்கம் ஏற்படுவதற்கு மணிக்கணக்கில் ஆகும். சில நேரங்களில் உடனடியாக கிறக்கநிலை வந்து விடும். அதை அருந்தியவுடன் எனக்கு தூக்கம் வந்து விடும். எனவே நான் ஓய்வில் இருக்கும்போது அதனை அருந்துவேன். வாரத்திற்கு மூன்று முதல் 5 தடவை இதனை எடுத்துக்கொண்டேன். அதன் பின் பரிசோதனை செய்து பார்த்தபோது புற்றுநோயில் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதனை சில நாட்கள் உட்கொள்ளாமல் பரிசோதனை செய்தபோது எந்த மாற்றமும் தெரியவில்லை. தொடர்ந்து இதனை நான் எடுத்துகொண்டேன். எனது மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் சரியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்