SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேபாளத்தில் அதிபர் தேர்தல் பண்டாரி மீண்டும் அதிபராக தேர்வு

2018-03-14@ 00:18:25

காத்மாண்டு : நேபாளத்தின் புதிய அதிபராக வித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பண்டாரி கடந்த 2015ல் தேர்தெடுக்கப்பட்டார். விரைவில் இவரது பதவிக்காலம் முடிவடைவதையடுத்து நேற்று அங்கு அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிக்க 334 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 550 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி பெற்றவர்கள். நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மத்தியில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் சிபிஎன்-யூஎம்எல், சிபிஎன், சங்கியா சமாஜ்வாடி மன்றம் நேபாள் மற்றும் சில கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் பண்டாரி மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வித்யா தேவி பண்டாரி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட நேபாளி காங்கிரஸ் தலைவர் குமாரி லக்‌ஷ்மி ராயை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்