SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இப்படியும் சில நல்லவர்கள் கனடாவில் சம்பள உயர்வை எதிர்த்து போராடும் டாக்டர்கள்

2018-03-14@ 00:17:10

ஒட்டாவா : கனடாவில் அரசு வழங்கியுள்ள சம்பள உயர்வு தங்களுக்கு தேவையில்லை என்று கூறி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளில் சம்பள உயர்வு கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கனடாவில் உள்ள அரசு டாக்டர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு தேவையில்லை என்று கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் கியூபெக் நகரில் சுமார் 10ஆயிரம் அரசு டாக்டர்கள் உள்ளனர். இவர்களின் சம்பளம் சமீபத்தில் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஆண்டுதோறும் டாக்டர்களுக்கு வழங்கவேண்டிய  மொத்த சம்பளமானது ரூ.23,500 கோடியில் இருந்து ரூ.29,700 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வை ஏற்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக 700க்கும் அதிகமான டாக்டர்கள் மருத்துவர் சங்க கூட்டமைப்பில் மனு அளித்துள்ளனர்.

பணிச்சுமையால் செவிலியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். சக ஊழியர்கள் இதுபோன்ற நிலையில் சிக்கி தவிக்கும்போது, எங்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை. இந்த சம்பள உயர்வை சுகாதாரத் துறை மேம்பாட்டுக்காக பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் சம்பள உயர்வை ஏற்க மறுத்துள்ள நிலையில், மெஜாரிட்டி டாக்டர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காதவரை சம்பள உயர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை என சுகாதார துறை அமைச்சர் கேடான் பெராட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்