SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-03-13@ 10:23:00

வாணவேடிக்கை போட்டி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 9வது சர்வதேச பைரோமியூசிக்கல் போட்டி கோலாகலமாக நடந்தது. இதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஆஸ்திரியா, தைவான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. கனடா நிறுவனத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையில் ஜொலிக்கிறது வானம்.

காட்டுக்குள் பேஷன் ஷோ

பிரான்சின் பாரீசில் ‘2018/2019 பேஷன் கலெக்‌ஷன்’ என்ற பெயரில் பேஷன் ஷோ நடந்தது. இதில், குளிர்காலத்திற்கு ஏற்ற புதுவித ஆடைகளுடன் மாடல் அழகியில் நடை போட்டனர். வழக்கமாக அரங்கத்தில் அல்லாமல், காட்டுக்குள் பேஷன் ஷோ நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புது மாடல் தள்ளுவண்டி

குழந்தையையும் லக்கேஜ் போல தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு வருகிறார் தாய் ஒருவர். இடம்: கொலம்பியாவின் குகுடா.

முதலை திருவிழா

பாகிஸ்தானில் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த ஷீடி பிரிவினர் சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் முதலை திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். கராச்சியில் உள்ள மங்கோபிர் ஆலயத்தில் முதலை திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடந்தது. முதலைகளை கடவுளாக நினைத்து வழிபட்டால், வாழ்வில் நன்மை கிடைக்கும் என நம்புகின்றனர். திருவிழாவையொட்டி, முதலைகளுக்கு விருப்பமான ஆடு, கோழி இறைச்சிகள் வழங்கப்பட்டன.

யானைகளுக்கு குஷி


தாய்லாந்தின் பாங்காக்கில் பிரபலமான கிங்ஸ் கோப்பைக்கான யானை போலோ போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற யானைகளுக்கு போட்டியின் இடையே, பப்பாளி, வாழை, அன்னாசி என பழவகைகள் கொடுக்கப்பட்டன. குஷியாக சாப்பிட்ட யானைகள் போலோ விளையாட்டை உற்சாகமாக விளையாடின.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-03-2018

  20-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • SausageDogWalkLondon

  லண்டனில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான சாஸேஜ் வகை நாய்களின் அணிவகுப்பு: கண்கவர் புகைப்படங்கள்

 • Congress84thNationalConference

  காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு நேற்றுடன் நிறைவு: சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

 • TurkishForcesAfrin

  சிரியாவின் ஆஃப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி ராணுவம்: குர்திஷ் மக்களுக்கான சிலையை தகர்த்தது

 • MicrosoftWordTeacher

  கரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி சர்ப்பரைஸ் செய்த இந்திய நிறுவனம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்