SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரகசியங்களை கசிய விட்ட அதிகாரிக்கு நீதிமன்ற காவல்

2018-02-15@ 01:28:41

புதுடெல்லி: விமான படை ரகசியங்களை கசிய விட்டதாக கைது செய்யப்பட்ட அதிகாரி அருண் மார்வாவை 2 வார காவலில் வைத்து விசாரிக்கும்படி டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி விமானப்படை தலைமை அலுவலகத்தில் குரூப் கேப்டனாக இருந்தவர் அருண் மார்வா. விமான படை குறித்த ரகசியங்களை வாட்ஸ் ஆப் மூலமாக பெண் ஒருவருக்கு இவர் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது.  இதை கண்காணித்து வந்த விமானப்படை உளவுபிரிவு அருணை சமீபத்தில் கைது செய்தது. இவரிடம்  விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில், எந்த தகவலையும் பெற முடியவில்லை.  இதையடுத்து, அவர் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அருணின் நீதிமன்ற காவலை 2 வாரங்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்