SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்பூரில் மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் : கைதான வங்கி மேலாளர் வீட்டில் விடிய, விடிய சோதனை

2018-02-15@ 00:57:18

ஆம்பூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமநாதராவ்(52) மேலாளராக பணிபுரிகிறார். இந்த வங்கியில் மாற்றுத்திறனாளியான பார்த்தீபன்(25) கடன் கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தார்.  

ஆனால் கடன் தொகை வழங்குவது குறித்து சரியான பதில் அளிக்காமல  பார்த்தீபனை வங்கி மேலாளர் பலமுறை அலைக்கழித்துள்ளார். பின்னர், லஞ்சமாக ₹40 ஆயிரம் கொடுத்தால் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்தீபன், இதுகுறித்து சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் பிற்பகலில் சென்னையில் இருந்து சி.பி.ஐ டிஎஸ்பி ேசாமய்யா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், ஆம்பூர் வங்கிக்கு சென்றனர். 8 ஆயிரத்தை பார்த்தீபனிடம் கொடுத்து மேலாளர் அறைக்கு அனுப்பினர். அங்கு ராமநாதராவ் லஞ்சம் வாங்கியபோது மறைந்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், ராமநாதராவ் உட்பட அனைத்து ஊழியர்களிடமும் 4 மணி நேரமாக துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ஆம்பூர் பைபாஸ் சாலையில் ராமநாதராவ் குடியிருந்த வீட்டிற்கு அவரை அழைத்து சென்றனர். இரவு முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை சோதனை செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரை கைது செய்து காரில் சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்