SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவுடி பிறந்தநாள் கொண்டாட்டம்: லாரிஷெட் உரிமையாளர் சரண்

2018-02-15@ 00:45:03

ஸ்ரீவைகுண்டம்: ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த லாரி ஷெட் உரிமையாளர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் கடந்த 6ம் தேதி இரவு பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 125க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர். இதில் பினு பிறந்த நாள் கொண்டாடிய லாரி ஷெட் உரிமையாளர் வேலுவையும்(45) போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வேலு நேற்று காலை சென்னை வக்கீல் சுப்பிரமணியன், ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் துரைராஜ் ஆகியோருடன் வந்து வைகுண்டம் மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கவும், பெரும்புதூர் நீதிமன்றத்தில் 23ம் தேதி ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.  ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட இடம் கொடுத்த வேலு மீது சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்