SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பிடிபட்டஐஎஸ் ஆதரவாளருக்கு 3 நாள் போலீஸ் கஸ்டடி : நீதிமன்றம் அனுமதி

2018-02-15@ 00:28:06

சென்னை. சென்னையில் பிடிபட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளரிடம் விசாரிக்க 3 நாள் போலீஸ் கஸ்டடி கொடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டைச் சேர்ந்த, அன்சர்மீரான் (28) என்பவரை கடந்த 12ம் தேதி சென்னையில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவரை தேசிய புலனாய்வு முகமை போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவின் மீது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.
நேற்று இந்த மனு மீதான உத்தரவை நீதிபதி வழங்கினார். அதன்படி அன்சர் மீரானை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். விசாரணை முடிந்து நாளை (16ம் தேதி) மாலை மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்