SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு 19ம் தேதி தீர்ப்பு : செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவிப்பு

2018-02-15@ 00:25:58

சென்னை: சிறுமி ஹாசினி கொலையாளி தஷ்வந்த் வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த குன்றத்தூர் சம்பந்தம் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தஷ்வந்த் (24). இவர், மாங்காடு அடுத்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது, அதே குடியிருப்பில் வசித்து வந்த ஹாசினி (6) என்ற சிறுமியை கடந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பலாத்காரம் செய்து எரித்து கொன்றார். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான இவர், கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவமானம் தாங்காமல் தஷ்வந்த் குடும்பம் குன்றத்தூருக்கு மாறியது.

இந்நிலையில் ஜாலியாக சுற்றுவதற்கும், பொழுதுபோக்கிற்கும் பணம் தர மறுத்த தாய் சரளாவையும் கடந்த டிசம்பர் 2ம் தேதி கொலை செய்து விட்டு 25 பவுன் நகை, 10 ஆயிரத்துடன் தஷ்வந்த் தப்பினார். மும்பையில் பதுங்கிய அவரை, தனிப்படை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நீதிபதி வேல்முருகன், வழக்கை விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் 42 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தஷ்வந்தின் தந்தை, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என 30 பேரிடம் நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தினார். அரசு தரப்பும் சாட்சியம் அளித்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் 19ம் தேதி ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்