SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 கூலி தொழிலாளர்கள் பலி மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது

2018-02-15@ 00:19:48

பெங்களூரு: கழிவு நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் போது மூச்சு தினறல் ஏற்பட்டு 2 கூலி தொழிலாளர்கள் இறந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு எச்.ஏ.எல் சரகத்திற்குட்பட்ட ஏசியஸ் லே அவுட் பகுதியில் தனியார் ஓட்டலுக்கு சொந்தமான கழிவு நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராமு, ரவி என்ற 2 கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். முறையான பாதுகாப்பு கவசம் இல்லாமல் கழிவு நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கியதால், 2 பேரும் மூச்சு  திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழில் அதிபர் வெங்கடேஷ் மற்றும் குத்தகைதாரர் ஆயுஷ் குப்தா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் கூலி தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் மற்றும் ஆயுஸ் குப்தா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், கூலி தொழிலாளர்களை வைத்து, கழிவு நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து எச்.ஏ.எல் போலீசார் மாநகராட்சி சுகாதாத்துறை அதிகாரி தேவராஜ் உள்பட 2 பேரை கைது செய்தனர். 2 பேரும் தங்களது பணிகளை செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எச்.ஏ.எல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X