SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது: 130 கிலோ கஞ்சா பறிமுதல்

2018-02-15@ 00:19:45

பெங்களூரு: பெங்களூருவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் போதைபொருள் விற்பனை செய்து வந்த 6 பேரை கைது செய்த தென்மண்டல போலீசார் 130 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரு உலிமாவு, கோரமங்களா, மைகோ லேஅவுட் சரகத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை  செய்யப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களிடமிருந்து 130 கிலோ கஞ்சா மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரு மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உயர் போலீசார் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதை பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;
பெங்களூரு உலிமாவு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் தமிழக மாநிலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (29), ராம்நகரை சேர்ந்த பசவராஜ் (28), கொத்தனூரை சேர்ந்த மகேந்திரா (22) என்று தெரியவந்தது. இவர்களில் முக்கிய குற்றவாளியான கோவிந்தராஜ் தமிழகத்தில் இருந்து பெங்களூருவிற்கு வேலை தேடி வந்தார். கொத்தனூர் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இதில் போதிய வருமானம் இல்லை. இதனால் கஞ்சா விற்பனையில் ஈடுபட தொடங்கினார். இதற்காக வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதை பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கு துணையாக பசவராஜ் மற்றும் மகேந்திராவை பயன்படுத்தி வந்துள்ளார். சோதனையில் கைதான 3 பேரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, 3 செல்போன், ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று கோரமங்களா போலீசார் சாம்ராஜ்நகரை சேர்ந்த நவீன் (29) என்பவரை கைது செய்து 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இவர் 2016ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் ககளிபுரா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நீண்டநாள் சிறை வாசத்திற்கு  பின்னர் வெளியே வந்தவர் சொகுசு வாழ்க்கைக்காக ஹை டெக் முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக மைகோ லே அவுட் போலீசார் ஒடிசாவை சேர்ந்த ஜகர் சாமல் (36) மற்றும் லோகநாத் சகானி (32) என்ற 2 பேரை கைது செய்து, 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 6 பேரிடமிருந்து மொத்தம் 130  கிலோ கஞ்சா பறிமுதல் ஆகியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னணியில் உள்ளவர்களை குறித்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X