SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ படிப்பிற்காக சீட் வாங்கி தருவதாக ஏமாற்றி லட்ச கணக்கில் மோசடி: பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் கைது

2018-02-15@ 00:19:43

பெங்களூரு:  பிரபல தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பட்டதாரி வாலிபர்களை மைகோ லே அவுட் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கான சீட் கேட்டு வரும் மாணவர்களை குறி வைத்து கும்பல் ஒன்று லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு, மோசடி செய்து வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மைகோ லே அவுட், சஞ்சய்நகர், கொடிகேஹள்ளி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மண்டல வாரியாக தனிப்படை அமைத்து, மோசடி கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த மோசடி தொடர்பாக 2 பட்டதாரி வாலிபர்களை மைகோ லே அவுட் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவை சேர்ந்த ரஞ்ஜித் செட்டி (31), ஜார்கண்டை சேர்ந்த ஜெயபிரகாஷ் சிங் (31) என்று தெரியவந்தது. இவர்களில் ரஞ்ஜித் செட்டி உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் முடித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் முதலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன் பின்னர் அதிகளவு பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற நோக்கில், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே 2013ம் ஆண்டு உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் 8 மோசடி வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் போலீசார் ரஞ்ஜித் செட்டியை கைது செய்து, சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இன்று வரை அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் ரஞ்ஜித் செட்டி மோசடி செய்வதை விடவில்லை. பெங்களூருவில் இருக்கும் மாணவர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
இதேபோன்று மற்றொரு குற்றவாளியான ஜெயபிரகாஷ் சிங் ஜார்கண்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம் முடித்துள்ளார். வேலை தேடி பெங்களூரு வந்தவர், ரஞ்ஜித் செட்டியுடன் கூட்டு சேர்ந்து, மாணவர்களை ஏமாற்றி மோசடி செய்ய தொடங்கியுள்ளார். இதன் மூலம் கிடைத்துள்ள பணத்தில் சொந்தமாக வீடு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

  இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது; கைதான 2 பேரையும் சந்தீப், ராகுல் என்ற 2 பேர் முதலில் இந்த மோசடியில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற இவர்கள், பின்னர் வெவ்வேறு பெயர்களில் போலி வேலை வாய்ப்பு அலுவலகங்களை திறந்துள்ளனர். அதை வைத்து ஆன்லைன் மூலம் மற்றும் புரோக்கர் வாயிலாக மருத்துவ சீட் கேட்டு வரும் மாணவர்களை குறி வைத்து லட்சம் ரூபாய் கொடுத்தால் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்துள்ளனர். இவர்களை நம்பி ஏராளமான மாணவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

மாணவர்களிடம் பெற்ற பணத்தில் ரஞ்ஜித் செட்டி, எலக்ட்ரானிக் சிட்டியில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஜெயபிரகாஷ் சிங் கொடிகேஹள்ளியில் வீடு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரஞ்ஜித் செட்டியிடமிருந்து ரூ.82 லட்சம் ரொக்கப்பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பைக், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜெயபிரகாஷ் சிங்கிடமிருந்து ரூ.9.45 லட்சம் ரொக்கம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் கைது நடவடிக்கை மூலம் மைகோ லே அவுட், சஞ்சய்நகர், கொடிகேஹள்ளியில் பதிவாகியிருந்த மோசடி வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது. இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள மைகோ லே அவுட் போலீசார் தலைமறைவாகவுள்ள சந்தீப் மற்றும் ராகுலை தேடி வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்