SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்லா என்கவுன்டரில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கைது

2018-02-15@ 00:19:03

புதுடெல்லி: பட்லா என்கவுன்டர் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியாக கருதப்படுவர் அரிஸ்கான். இவர், கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி பட்லா ஹவுசில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் போலீசாரை ஏமாற்றி தப்பி சென்றவர். இந்த சம்பவத்தில் இரண்டு இந்தியன் முஜாகிதீன்கள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த இந்த தாக்குதலை தலைமையேற்று நடத்திய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டார். ஆனால், அரிஸ்கான் போலீசாரை ஏமாற்றி தப்பிச்சென்று தலைமறைவானார்.

இந்நிலையில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவரை நேற்று டெல்லியில் கைது செய்தனர். ஏற்கனவே, கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஷசாத் அகமதுவிற்கு கடந்த 2013ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்த அவரது மேல்முறையீட்டு மனு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X