SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடபழனி 100 அடி சாலையில் கஞ்சா விற்ற எஸ்ஆர்எம் மாணவன் உட்பட 2 பேர் கைது

2018-02-15@ 00:08:24

சென்னை: வடபழனி 100 அடி சாலையில் கஞ்சா விற்பனை செய்த எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சக மாணவர்களுக்கு ரூ.100க்கு கஞ்சா சிகரெட் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சென்னை வடபழனியில் உள்ள 100 அடி சாலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வடபழனி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்படி போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது மாணவர்கள் சிலர் சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது உறுதி ெசய்யப்பட்டது. ஆனால் கஞ்சா விற்பனை செய்யும் மாணவர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்யும் மாணவர்கள் குறித்து தகவல் சேகரித்தனர். அதன்படி போலீசார் கஞ்சா விற்பனை செய்யும் மாணவர்களை கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை எஸ்ஆர்எம் கல்லூரி முன்பு மாணவன் ஒருவன் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தான். அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாடியை சேர்ந்த பொறியாளர் அரவிந்தன்(24) என்றும், கல்லூரி மாணவன் ஒருவரிடம் கஞ்சா வாங்க வந்ததாகவும் கூறினான். உடனே போலீசார் அரவிந்தன் மூலம் கல்லூரி மாணவனுக்கு போன் செய்து ஒரு கிலோ கஞ்சா வேண்டும் என்றும் பேசவைத்தனர். அதன்படி சிறிது நேரத்தில் பைக்கில் கஞ்சாவுடன் சம்பந்தப்பட்ட மாணவன் வந்தான். அப்போது மறைந்து இருந்த போலீசார் பைக்கில் வந்த மாணவனை பிடித்து பைக்கை சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது. மாணவனிடம் விசாரணை நடத்திய போது நொளம்பூரை ேசர்ந்த சுதர்சன்(21) என்றும் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. உடனே போலீசார் பாடியை சேர்ந்த அரவிந்தன் மற்றும் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் சுதர்சன் ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். சுதர்சனுடன் வந்த கல்லூரி மாணவன் சூர்யாவை கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டனர். அவர்களிடம் இருந்து பைக் மற்றும் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் ெசய்யப்பட்டது.

கஞ்சா கொண்டு வந்த கல்லூரி மாணவன் சுதர்சனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:  சுதர்சன் சிறு வயதில் இருந்தே கஞ்சா அடித்து வந்ததாகவும், பள்ளி பருவத்திலேயே கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் நட்பு ஏற்படுத்தி வந்தது தெரியவந்தது. தற்போது என்னுடன் கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்திற்கு ஒரு கிலோ கஞ்சா வாங்கியதாக கூறினான். வழக்கமாக கீழ்ப்பாக்கம் அருகே உள்ள டி.பி சத்திரம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சிகரெட்டில் உள்ள புகையிலையை அகற்றி அதில் கஞ்சா பொடியை அடைத்து ரூ.100 முதல் ரூ.150 வரை சக மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கல்லூரியில் படிக்கும்  மாணவர்கள் பலர் வெளிமாநிலங்களில் இருந்து வந்து விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதனால் தடையின்றி கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் பலர் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளதால் மாதத்திற்கு 10 கிலோ கஞ்சா வரை விற்பனை ஆகும். இதனால் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். சக மாணவர்கள் பல குழுவாக சேர்ந்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த நான்காம் ஆண்டு மாணவனை தேடி வருகின்றனர். மாணவனே சக மாணவர்களுக்கு கஞ்சா சிகரெட் விற்பனை செய்து வந்த சம்பவம் வடபழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா விற்று கார் வாங்கிய மாணவன்: கஞ்சா விற்பனை செய்த எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் சுதர்சன் கடந்த 3 ஆண்டுகளாக தான் படித்து வந்த கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கஞ்சா சிகரெட் விற்பனை செய்து வந்துள்ளான். அதில் கிடைத்த வருமானத்தில் ஹூண்டாய் ஐ-20 கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X