SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு வேலை யாருக்கு என்பதை நிர்ணயிப்பதற்கு 'டாஸ்' போட்டு பார்த்த பஞ்சாப் அமைச்சரால் சர்ச்சை

2018-02-14@ 14:39:21

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், கல்லூரி ஆசிரியரின் பணியிடத்தைத் தீர்மானிப்பதற்காக நாணயத்தைச் சுண்டிவிட்டு முடிவெடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பி.பி.எஸ்.சி. என்னும் பஞ்சாப் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி, பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு பணி நியமனம் நடந்தது. இதில் தேர்வான 37 மெக்கானிக்கல் விரிவுரையாளர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை வழங்க தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பாட்டியாலா நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு இடத்துக்கு 2 பேர் போட்டி போட்டுள்ளனர். இருவரும் சம தகுதி படைத்தவர்கள் என்பதால், இதில் முடிவு காண்பதற்கு ‘டாஸ்’ முறையை பின்பற்றி அமைச்சர் சரண்ஜித் சிங் நாணயத்தை சுண்டினார். இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் காரணமாக அம்மந்திரியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஆனால் தனது செயலை அமைச்சர் சரண்ஜித் சிங் நியாயப்படுத்தியுள்ளார்.

முந்தைய பாரதிய ஜனதா, சிரோமணி அகாலி தள கூட்டணி ஆட்சியில் பணி நியமனத்தில் லஞ்சம் தாண்டவம் ஆடியது. நான் அதை ஒழித்துள்ளேன் என்று சரண்ஜித் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விரிவுரையாளர் பணியிட நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதே அமைச்சரின் எண்ணம். இதை ஊடகங்கள்தான் தேவையில்லாமல் சர்ச்சையாக்கி விட்டன என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்