SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய அரசை முகேஷ் அம்பானியால் 20 நாட்கள் நடத்தமுடியும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

2018-02-14@ 13:07:48

டெல்லி: இந்திய அரசை 20 நாட்களுக்கு முகேஷ் அம்பானியால் மட்டுமே நடத்தமுடியும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 2018 ராபின்ஹூட் இன்டெஸ்க்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் முன்னணி பணக்காரர்கள் அந்தந்த நாட்டின் அரசுகளை எத்தனை நாட்களுக்கு நடத்த முடியும் என்று மதிப்பிட்டுள்ளது. அதன்படி உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெஜோஸ் அந்நாட்டின் அரசை 5 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பணக்காரரான ஹூக் கிராஸ்வேனரும், ஜெர்மனியின் பணக்காரரான டயட்டர் ஸ்குவார்சும் அவரவரது நாட்டின் அரசை 5 நாட்களுக்கு மட்டுமே நடத்தமுடியும் என்று தெரிவித்துள்ளது. அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா 4 நாட்கள் சீன அரசை நடத்த முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டை சேர்ந்த ஜான் பிரெட்ரிக்ஸன் என்பவர் 441 நாட்கள் அந்நாட்டின் அரசை நடத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஹாங்காங் நாட்டை சேர்ந்த லி கா ஷிங் 191 நாட்கள் அந்நாட்டின் அரசை வழிநடத்த முடியும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்