SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமிலம் கலந்து ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள்: பணத்தாசையால் விபரீதம்

2018-02-14@ 12:19:05

சேலம்: சேகோ ஆலை உரிமையாளர்கள் சிலர் பணத்தாசையால், அமிலம் கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மரவள்ளிக்கிழங்கு விலை சரி பாதிக்கும் கீழே சரிந்துள்ளது. தமிழகத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் வருடத்திற்கு 23 லட்சம் மூட்டை ஜவ்வரிசியும், அது தவிர ஸ்டார்ச் மாவும் தயாரிக்கப்படுகின்றது. ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயார் செய்கிறார்கள்.

ஆனால் அதிகப்படியான வருவாயை ஈட்ட, எடை கூட வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு பவுடர், சோக் பவுடர் போன்றவற்றைக் கலக்கின்றனர். மக்காசோளம் கொண்டு நேரடியாக ஜவ்வரிசி தயாரிக்க இயலாது, அவ்வாறு நேரடியாக ஜவ்வரிசி தயாரிக்கும்போது ஜவ்வரிசியின் நிறம் இளஞ்சிவப்பாக மாறிவிடும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை நிறம் மாற்ற சாயப்பட்டறைகளில் ஆடைகளுக்கு நிறமேற்ற பயன்படும், சோடியம் ஹைப்போகுளோரைட், சல்ஃப்யூரிக் அமிலம் போன்ற பல வகை ரசாயணங்களை கொண்டு அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் மூலம் 3 பிரிவுகளாக பிளீச் செய்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி உணவில் சேர்க்கப்படும்போது, அல்சர் நோயில் முதல் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வால், தமிழகத்தின் ஜவ்வரிசி பயன்பாடு வடமாநிலங்களில், குறைந்ததன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி அதிகரித்திருந்தபோதும், ஆலை உரிமையாளர்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டாததால், மிகவும் குறைவான விலைக்கு மரவள்ளி கிழங்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்