SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி ரயில்நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி : ஸ்கேனர் கருவிகள் பழுது, ரோந்து பணியில் அதிகாரிகள் அலட்சியம்

2018-02-14@ 11:57:36

திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நீண்ட நாட்களாக சரி செய்யப்படாத ஸ்கேனர் கருவிகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மும்பை தாக்குதலுக்கு பிறகு அனைத்து ரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா, வாகனங்களுக்கான ஸ்கேனர், டோர் மெட்டல் டிடெக்டர் கருவி என பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டது. இரவு நேர ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், துப்பாக்கி ஏந்திய காண்காணிப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதே போல தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா, பயணிகள் நுழைவுவாயில் முன்பு டோர் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டன. மேலும் ரயில் நிலையத்தின் நுழைவு வாயில்முன் ரயில் நிலையத்துக்கு வரும் வாகனங்களை சோதனை செய்ய ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டது. வாகனங்களை சோதனை செய்யும் கருவி தரையில் பொருத்தப்பட்டு பல மாதங்களாகியும் வாகனங்களுக்கான ஸ்கேனர் கருவி பயன்பாட்டில் இல்லாமல் இன்றளவும் காட்சி பொரு ளாக இருந்து வருகிறது. காலதாமதத்திற்கு காரணம் முறையான சோதனைக்கு பின்னரே இயக்க முடியுமென ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்தது. இருந்த போதும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும், திருச்சி கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.

தலைமையிடத்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டுமே வாகன ஸ்கேனர் செயல்படுவது போல் காட்டிக் கொள்கின்றனர். இதே போல திருச்சி ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் பயணிகளுக் கான உடமைகளை ஸ்கேனர் செய்யும் இடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள ஸ்கேனர் கருவி பல மாதங்களாக கோளாறு ஏற்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதாக ஆர்பிஎப் அதிகாரிகளே புலம்பி வருகின்றனர். கோளாறு சரி செய்யப்படாவிட்டாலும் முக்கிய நாட் களான சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மட்டுமே தூசி தட்டி பெயரள விற்கு ஆர்பிஎப் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர்.
 திருச்சி கோட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய ரயில்நிலையங்களில் திருச்சி ரயில்நிலை யம் முக்கிய பங்கு வகித்தாலும், பாதுகாப்பில் திருச்சி ரயில்நிலையம் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் திருச்சி கோட்ட அதிகாரிகள் வருவாய் அதிகரிப்பதில் எடுக்கக்கூடிய நட வடிக்கைகளை பாதுகாப்பு கருவிகளை பாரமரிப்பதில் எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

 • sirya_dead123

  சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X