SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டயர் வெடித்து மினி லாரி கவிழ்ந்தது : சாலையில் சிதறிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

2018-02-14@ 11:56:32

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே டயர் வெடித்து மினி லாரி கவிழ்ந்ததில் பல லட்சம் மதிப்பிலான மீன்கள் சாலையில் சிதறியது. மீன்களை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். மதுரை முல்லைநகரைச் சேர்ந்த நீலமேகம் மகன் மாயக்கண்ணன் (30). டிரைவரான இவர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இருந்து மினி லாரியில் மீன்களை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டார். கிளீனராக அருள் (28) இருந்தார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூர் நான்கு வழிச்சாலையில் செல்லும்போது, எதிர்பாராவிதமாக மினி லாரியின் பின் டயர் திடீரென வெடித்தது.

இதனால் நிலை தடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் டிரைவர் மாயக்கண்ணன், கிளீனர் அருள் இருவரும் காயமடைந்தனர். மேலும் லாரியில் ஏற்றி இருந்த மீன்கள் சாலையில் சிதறின. இதையறிந்த அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச்சென்றனர். நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்