SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர் தினம் இன்று கொண்டாட்டம் : குமரி கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடு

2018-02-14@ 11:54:49

நாகர்கோவில்: காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் காதலர் தினத்தையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஏராளமான இளம் ஜோடிகள் வருவது வழக்கம். குறிப்பாக கன்னியாகுமரி, திற்பரப்பு போன்ற  சுற்றுலா தலங்களில் இளம் ஜோடிகள் அதிகளவில் வருவது வழக்கம். இதற்கிடையே பல்வேறு அமைப்புகள் சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளன. காதல் ஜோடிக்கு ஆதரவாகவும் சில அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்த போவதாக கூறப்படுகிறது.

இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காதலர் தினத்தையொட்டி சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் அதிகளவில் வரலாம் என்பதால் அங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் போலீசார் கண்காணிக்க எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி, திற்பரப்பு, மாத்தூர் தொட்டி பாலம், சொத்தவிளை பீச், சங்குதுறை பீச் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிக்க உள்ளனர். காதல் ஜோடிகள் அத்துமீறி நடந்து கொண்டாலும், காதல் ஜோடியிடம் வன்முறையில் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.  காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் நகரில் நேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்