SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்

2018-02-14@ 10:24:53

நாமக்கல்: எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு மும்பையில் இன்று எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள 4500 லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அளவிலான டெண்டர் முறையை மாற்ற வலியுறுத்தி மேற்குவங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பிரச்சனைக்கு தீர்வு காண மும்பையில் இன்று எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பிரநிதிகளுடன் எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்