SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக தங்கம் இறக்குமதி கண்காணிப்பு : மத்திய அரசு திட்டம்

2018-02-14@ 02:29:36

புதுடெல்லி: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதியை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு தங்கத்தின் மீது ஒரு சதவீதம் மதிப்பு கூட்டுவரி வசூலிக்கப்பட்டது. அத்துடன் சுங்கவரி,  மதிப்புக்கூட்டுவரி, கலால் வரி சேர்த்து 12.43 சதவீதம் ஆக இருந்தது.  புதிய வரி விதிப்பு முறையில் தங்கத்தின் மீதான வரி  3.24 சதவீதம் அதிகம் என்பதால் இதை குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரினர். இருப்பினும், 3 சதவீத ஜிஎஸ்டியே இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி அதிகரித்தது. குறிப்பாக, ஜிஎஸ்டிக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து தென்கொரியாவில் இருந்து தங்கம் இறக்குமதி ஒரே மாதத்தில் 33.86 கோடி டாலராக அதிகரித்திருந்தது. முந்தைய நிதியாண்டு முழுவதற்கும் இங்கிருந்து 47.04 கோடி டாலருக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

தென்கொரியாவுடன் 2010ம் ஆண்டில் இருந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் அடிப்படை வரி வசூலிக்கப்படாது. இதை தொடர்ந்து தென்கொரியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு தென்கொரியாவில் இருந்து தங்கக்கட்டிகளாக இல்லாமல் ஸ்பூன், கிண்ணம் போன்ற பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி முறைகேடாக இறக்குமதி செய்வதை தடுக்க, தென்கொரியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உத்தரவிட்டது.

 இதுபோல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வாய்ப்புகள் உள்ளதால் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி தங்கம் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கவில்லை என நகை வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு இந்த விஷயத்தில் பரிசீலனை செய்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக கொள்கை முடிவுகளை அறிவிக்க வேண்டும். சிறப்பு அடிப்படை வரி விதிக்கலாம் அல்லது பிற நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை அடிப்படை வரியை குறைக்கலாம் என்று தெரிவித்தனர்.

 தங்கம் நுகர்வில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இங்கு 2016ல் 674 டன்களாக இருந்தது. கடந்த ஆண்டில் 863.2 டன் இறக்குமதி செய்யப்பட்டது.

ஜிஎஸ்டியில் தங்கத்தின் மீதான வரி 3 சதவீதமாக உயர்த்தப்பட்ட பிறகு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்த நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி உயர்ந்துள்ளது.

 தென்கொரியாைவ தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் தங்கம் இறக்குமதி அதிகரித்து வருகிறது

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்