SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாதாரண மொபைல்களிலும் ஜிபிஎஸ் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு

2018-02-14@ 02:27:07

புதுடெல்லி: சாதாரண போன்களிலும் ஜிபிஎஸ் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சாதாரண போன் உட்பட அனைத்து மொபைல் போன்களிலும், பயன்படுத்துபவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை கண்டறிய உதவும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவிக்கு அழைக்க பேனிக் பட்டன் எனப்படும் அவசரகால அழைப்பு பட்டன் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு 2016ம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. இது மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.  சாதாரண மற்றும் ஸ்மார்ட் போன் அல்லாத மொபைல்களுக்கு இந்த கட்டாய உத்தரவில் இருந்து விலக்கு அளித்து கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. தற்போது மீண்டும் அனைத்து போன்களிலும் இந்த வசதியை கட்டாயமாக அரசு உத்தேசித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேனிக் பட்டன் அனைத்து சாதாரண மொபைல் போன்களிலும் கட்டாயம் என அரசு உத்தரவிட்டது. இதற்கு ஜிபிஎஸ் கட்டாயம். ஆனால், மொபைல் தயாரிப்பாளர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஜிபிஎஸ் வசதி கொண்டுவந்தால் சாதாரண போன்களின் விலை குறைந்த பட்சம் 200 அதிகரிக்கும் என தெரிவித்திருந்தனர். கார்களில் சீட்பெல்ட், ஏர்பேக் கட்டாயம் ஆனபோது விலை உயர்ந்தும் மக்கள் பாதுகாப்பு கருதி இவற்றை வாங்கினர். இதுபோல் ஜிபிஎஸ் பொருத்துவதால் விலை உயர்ந்தாலும் அவர்கள் வாங்க விரும்புவார்கள். எனவே, ஜிபிஎஸ் இருந்தால்தான் பேனிக் பட்டன் வசதியை அளிக்க முடியும். மொபைல் போன் டவர் மூலம் இருக்கும் இடத்தை அறிவதை விட இது துல்லியமானது. எனவே பெண்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு சாதாரண போன்களிலும் ஜிபிஎஸ் பொருத்துவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்