SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரிக்க வாய்ப்பு

2018-02-14@ 02:25:04

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி குறைந்தது. இதனால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2ம் இடம் வகிக்கிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.  அகஸ்தியன்பள்ளியில் கோடியக்காடு, கடினெல்வயல் ஆகிய பகுதிகளில் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஜனவரி மாதம் துவங்கி அக்டோபர் வரை நடைபெறும் உப்பு உற்பத்தி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தற்போது துவங்கி நடைபெறுகிறது. சென்ற ஆண்டு உப்பு விலை 100 கிலோ மூட்டை ரூபாய் 450 மேல் விற்பனை ஆகவில்லை. இதனால் உற்பத்தி செலவிற்கு கூட கட்டுபடியாக வில்லை. மேலும் சென்ற ஆண்டு உற்பத்தி செய்த உப்பு சுமார் ஒரு லட்சம் மூட்டை இருப்பில் உள்ளதாலும் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அகஸ்தியன்பள்ளியில் 3000 ஏக்கரில் நடைபெற வேண்டிய  உப்பு உற்பத்தி சரிபாதி மட்டுமே நடைபெறுகிறது. குறைந்த அளவே உப்பு உற்பத்தி நடைபெறுவதால் விலை ஏறும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கையாக உள்ளனர். பொருளாதார நெருக்கடியால் பல உப்பு உற்பத்தியாளர்கள் பணிகளை துவங்காமல் உள்ளனர். முழுவீச்சில் உப்பு உற்பத்தியாக இன்னும் ஒருமாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

1 தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்கு அடுத்து வேதாரண்யம் 2ம் இடம் வகிக்கிறது.
2 ஆண்டுதோறும் ஜனவரி முதல் அக்டோபர் வரை 6 லட்சம் டன் உற்பத்தியாகிறது.
3 கடந்த ஆண்டு உப்பு தேக்கம் அடைந்ததால் பாதி பரப்பளவில் மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்