SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்பார்த்த அளவுக்கு பாஜ வளரவில்லை

2018-02-14@ 00:57:27

மாநில சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக 224 தொகுதிகளுக்கும் பாஜ சார்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 10 நாட்களாக தொகுதியில் சுற்றி வருகிறார்கள்.  பெங்களூவில் நேற்று  224 பேரவை தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் பாஜ தேசிய அமைப்பு செயலாளர் ராம்லால் கலந்துகொண்டு பேசும்போது, மாநில சட்டப்பேரவைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், வாக்குச்சாவடி மட்டத்தில் இருந்து கட்சிக்கு சரியான கட்டமைப்பு செய்யவில்லை என்பது பார்வையாளர்களின் ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

 கட்சி ஆட்சி–்க்கு வர வேண்டும் என்பது தலைவர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் அதை செயல்படுத்தும் வேராக இருக்கும் தொண்டர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. தொண்டர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும். பொதுக்கூட்டம், மாநாடு, ஊர்வலம் நடத்தும்போது ஆட்களை கொண்டு வந்து பலத்தை காட்டுவதால் கட்சி வளர்ந்து விடாது. உண்மையான தொண்டர்கள் நின்று வேலை செய்பவர்களை உருவாக்க வேண்டும். அந்த விஷயத்தில் மாநில பாஜ தோல்வி கண்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவு கட்சி வளர்ச்சி பெறவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

எடியூரப்பா, ஈஸ்வரப்பா தோல்வியடைந்த தேர்தல்
மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 1999ல் நடந்த தேர்தலில் எடியூரப்பா மற்றும் ஈஸ்வரப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். மக்களவைக்கு கடந்த 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பாவை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகாலிங்கப்பா சுமார் 7 ஆயிரத்து 561 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்தார். ஷிவமொக்கா நகர தொகுதியில் போட்டியிட்ட ஈஸ்வரப்பாவை மஜத சார்பில் போட்டியிட்ட சந்திரசேகரப்பா, 6 ஆயிரத்து 574 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்தார்.

அப்போது பாஜ சார்பில் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவராக ஜெகதீஷ்ஷெட்டர் இருந்தார். தேர்தலில் தோல்வியடைந்த எடியூரப்பாவை மேலவை உறுப்பினராகவும், ஈஸ்வரப்பாவை மத்திய பட்டு வளர்ச்சி வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டனர். 2004ல் நடந்த தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X