SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹலோ மைக் டெஸ்ட்டிங்

2018-02-14@ 00:57:23

* எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் புகார் கூறிவரும் காங்கிரஸ் தலைவர்களை போல் கோழைகள் யாரும் கிடையாது. நாட்டில் ஊழலுக்கு பிதாமகன்களே காங்கிரஸ் தலைவர்கள் தான். சித்தராமையா அமைச்சரவையில் உள்ளவர்களில் டஜன் கணக்கில் ஊழல் பெருச்சாளிகள் உள்ளனர். அவர்களுக்கு எடியூரப்பாவை குறித்து பேச என்ன தகுதி உள்ளது. மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தால், சித்தராமையா உள்பட அவரது அமைச்சரவையில் இருக்கும் பாதி பேர் சிறை கம்பியின் பின்னால் நிற்பார்கள்.
 - ரமேஷ் ஜிகஜிணகி, மத்திய அமைச்சர்.

* சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கும் நிலையில், மக்களை கவர மாநில அரசியல் நாடகங்களை பாஜ தலைவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள். அதில் ஒன்று குடிசைகளில் தங்குவது. காலம் காலமாக மதம், சாதியை மூலதனமாக வைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஒதுக்கி வந்தவர்களுக்கு இப்போது குடிசையில் வாழும் எஸ்.சி.கள் மீது அக்கறை வந்துள்ளது. தோல்வி பயம் காரணமாக இதுபோன்ற பேஷன் செயல்களில் எடியூரப்பா இறங்கியுள்ளார்.
 - எம்.டி.லட்சுமிநாராயணா, மேலவை உறுப்பினர்.

* இதுவரை பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்த இளைஞர் சமூகம், அவரின் கபட நாடகங்களை பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர். எதிர்கால இந்தியாவை வழி நடத்திச் செல்லும் தகுதியும், திறமையும் இளைஞரான ராகுல்காந்தியிடம் மட்டுமே உள்ளது என்பதை புரிந்துகொண்டு தற்போது ராகுல் பின்னால் அலைஅலையாக அணி வகுத்து வருகிறார்கள். வரும் 2019ல் நடக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியை பிடிக்கும். ராகுல் பிரதமராவார். அந்த வெற்றிக்கு அச்சாரமாக கர்நாடக பேரவை தேர்தல் வெற்றி அமையும்.
- முத்துஅனுமேகவுடா, மக்களவை உறுப்பினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்